வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்
வேலை நிறுத்தம்
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ள நிலையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.இதில் மாநகராட்சி தெற்கு வார்டில் உள்ள 79வது வார்டு,மேற்கு மண்டலம் 24 வது வார்டு,மத்திய மண்டலம் 68 மற்றும் 83 வார்டு வேலை பார்த்து வரும் 300 ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கு முழு சம்பளம் வழங்கபடுவதில்லை என கூறி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில் முழு சம்பளம் தராமல் பாதி சம்பளம் மட்டுமே தங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் இதுகுறித்து கேட்டால் முறையாக பதில் அளிப்பதில்லை என தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டினர்.
Next Story