ஈரோட்டில் தூய்மைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாநகராட்சி 4 வது மண்டல அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சி தினக்கூலி தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கி வந்த ஊதியமான நாளொன்றுக்கு ரூ.707 ஐ 2023 ஆகஸ்ட் முதல் நாளொன்றுக்கு ரூ.687 ஆக குறைத்துள்ளதைக் கண்டித்தும், நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமான ரூ 725 ஐ வழங்க வேண்டும்,
தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடும் ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும், 480 நாட்கள் பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும் , மாதந்தோறும் முதல் தேதியன்று ஊதியம் வழங்க வேண்டும்,
மாநகராட்சி பெயர் பொறித்த 3 செட் சீருடைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஈரோடு காசிபாளையத்தில் உள்ள 4-வது மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story