தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன இந்த 33 வார்டுகளுக்கும் ஒப்பந்த தூய்மை பணியாளராக 120 பேர் பணியாற்றி வருகின்றனர், மேலும் நகராட்சியில் ஒப்பந்தத்தின் மூலம் SR எண்டர்பிரைஸ் தனியாருக்கு சொந்தமான நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறது, இதைனையடுத்து இந்த நிறுவனம் ஆத்தூர் நகராட்சியில் பணியாற்றும் 120 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்களுக்கு ஒரு மாத கால சம்பளம் வழங்காததால் இன்று காலை பணிக்கு வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 120 பேரும் பணிக்கு செல்லாமல் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தையும் உடனடியாக வழங்க கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்கள் வாழ்வாதாரமே இந்த சம்பளத்தை நம்பி வாழ்வதாகவும் இதனால் வீட்டு வாடகை மளிகை சாமான்கள் குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வருவதாகவும், தற்போது எங்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கோரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முற்றுகை போராட்டத்தால் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டு பகுதியில் காலை முதலே தூய்மை பணிகள் மேற்கொள்ளாமல் குப்பைகள் தேங்கி வருகின்றன. மேலும் இதை தமிழக அரசும் மாவட்ட ஆட்சியரும் தூய்மை பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.