கண்களை கட்டிக் கொண்டு கராத்தே போட்டியில் அசத்திய 5ம் வகுப்பு மாணவன்
ஒரு மணி நேரத்தில் இடைவெளி விடாமல் குத்துகள் விட்ட மாணவன்
சேலத்தில் 5ம் வகுப்பு மாணவன் கண்களை கட்டி கொண்டு கராத்தே போட்டியில் சாதனை படைத்துள்ளார்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் பாரம்பரிய கலைகளின் சங்கமம் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாண்வர்களுக்கு போட்டி நடைபெற்றது. அதில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் நந்தகுமாரன் இரு கண்களை கட்டிக்கொண்டு கால்களை அகற்றி அமர்ந்தபடி ஒரு மணி நேரட்தில் இடைவிடாது 10 ஆயிரத்து 51 குத்துகள் விட்டு சாதனை படைத்துள்ளார்.
மாணவரின் இந்த திறமை வேர்ல்டு சூப்பர் டேலண்ட் புக் ஆஃப் ரெக்கார்ட் என்ற அமைப்பில் இடம்பெற்றுள்ளது. கராத்தேவில் சாதனை புரிந்த மாணவனுக்கு வேர்ல்டு சூப்பர் டேலண்ட் புக் ஆஃப் ரெக்கார்ட் அமைப்பின் சார்பில் பாராட்டி சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது.
Next Story