சங்கரா கல்லுாரி மாணவர்கள் ஓட்டுப்பதிவு உறுதிமொழி ஏற்பு
உறுதிமொழி ஏற்பு
வரும் லோக்சபா தேர்தலில், முதன் முறையாக ஓட்டளிக்கும், மாணவ- - மாணவியர் வாயிலாக, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காஞ்சிபுரம் சங்கரா கல்லுாரியில் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் முனைவர் கலை ராம. வெங்கடேசன் தலைமை வகித்தார்.
இதில், 100 சதவீதம் ஓட்டளிப்பது குறித்து நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் விழிப்புணர்வு வண்ணம் கோலம் வரைந்திருந்தனர். லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிப்போம் என, முதன் முறையாக ஓட்டளிக்க உள்ள கல்லுாரி மாணவ - -மாணவியர் உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து, கல்லுாரிமுதல்வர் எழுதிய தேர்தல் விழிப்புணர்வு பாடலை மாணவர் குழுவினர் பாடி ஒலிப்பதிவு செய்து மாணவர்கள் பலருக்கும் சமூகவளைதளம் வாயிலாக பரப்பினர். கல்லுாரியின் சுருதி சமுதாய வானொலி வாயிலாகவும் தேர்தல் விழிப்புணர்வு குறித்த பாடல் ஒலிபரப்படுகிறது.
உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் தமிழ் துறை தலைவர் ராதாகிருஷ்ணன், வணிகவியல் துறை தலைவர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்."