சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா நாளை தேரோட்டம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா நாளை  தேரோட்டம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா நாளை தேரோட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவில் நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

விழா நாள்களில் சுவாமி. அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருவர். இந்த ஆண்டிற்கான சித்திரை பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக பெருங்கோட்டூர் சென்று கோயில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது கொடியேற்று விழாவை முன்னிட்டு காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடந்தது.

தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. காலை 6.30 மணிக்கு சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகங்கள்,தீபாராதனை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை 21ம் தேதி (ஞாயிறு) காலை 9.00மணிக்கு மேல் நடைபெறுகிறது. சித்திரைத்திருநாளில் சுவாமி, அம்பாள் இரண்டு தேர்களும் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story