சங்கரன்கோவில்: ரூ.70 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
சங்கரன்கோவிலில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.70 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல் பேரில் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மனோகரன் உத்தரவுப்படி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சங்கரன்கோவிலை சேர்ந்த சிவசங்கர் (52) என்பவர் சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனையடுத்து அவரை போலீசார் வளைத்து பிடித்து விற்பனைக்கு வைத்திருந்த 70 ஆயிரம் மதிப்பு உள்ள லாட்டரி பறிமுதல் செய்தனர், இது குறித்து சங்கரன்கோவில் நகர காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story