சங்கரன்கோவில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 31 வார்டு பகுதிகளை கொண்டதாகும் இந்த நகராட்சியில் திமுகவை சேர்ந்த உமாமகேஸ்வரி தலைவராகவும், அதிமுகவை சேர்ந்த கண்ணன் துணைத்தலைவராகவும் இருப்பதால் நகராட்சி வார்டு பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை செய்வதில் இருவருக்கும் இடையே கடும் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் அதிமுக வார்டு பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய தலைவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கடந்த சில மாதங்களாக வார்டு பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று நகராட்சிக்கு உட்பட்ட 8 வது வார்டு கவுன்சிலர் சரவணன் தலைமையில் லட்சுமிபுரம் பகுதியில் சாலை வசதி தெருவிளக்கு கழிவு நீர் ஓடை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்து தரக்கோரி 50க்கும் மேற்பட்ட பகுதி மக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோவில்பட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த சங்கரன்கோவில் நகர போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் நகராட்சி அதிகாரிகளிடம் தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து விரைவில் பணிகளை மேற்கொள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி காணப்பட்டது..