சங்கரன்கோவிலில் போக்குவரத்து நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் சப் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் பூ மார்க்கெட் ஆகியவை இயங்கி வருகிறது. இதனால் இங்கு வருகை தரும் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீர் போக்குவரத்து ஏற்பட்டது.
இதனால் ராஜபாளையம் சாலை, மெயின் ரோடு, வடக்குரதவீதி திருவேங்கடம், சாலைகளில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசாரும், காவல்துறையினரும் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
சிவராத்திரியை முன்னிட்டு சங்கரன் கோவில் மற்றும சுற்றுவட்டார பகுதி கோயில்களில் பஞ்ச ஸ்தலங்கள் அமைந்துள்ளதால் கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் ஏராளமான வருகை தருவார்கள். எனவே கூடுதல் போலீசார் நியமித்து போக்குவரத்து சரி செய்யும் பணிகள் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலில் தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.