சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் பரபரப்பு பேட்டி

X
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்
சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளம் பகுதியில் நடந்த சம்பவத்திற்கு காரணமான காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக எம்எல்ஏ மனு அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா நேற்று மாலை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், சங்கரன் கோவில் அருகே உள்ள தேவர்குளம் பகுதியில் நடந்த சம்பவத்திற்கு காரணமான காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்.
அந்தப் பகுதியில் பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். இதில் சங்கரன்கோவில் திமுக நகரச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story