சங்கரன்கோவில் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம்

சங்கரன்கோவில் சித்திரை திருவிழா  திருத்தேரோட்டம்
திருத்தேரோட்டம்
சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் நடந்த சித்திரை திருவிழா திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வட்டம் பிடித்து இழுத்தனர்.

தென்காசி மாவட்டம் சக்கரன்கோவிலில் உலகப் புகழ்பெற்ற சிவஸ்தலங்களுள் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் அன்று முதல் இன்று வரை தினமும் காலை மாலை ஆகிய இரு வேலைகளில் சுவாமி மற்றும் அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது.

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் சுவாமி மற்றும் அம்பாள் ஆகியோர் தனித்தனியாக வீற்றிருக்கும் இரண்டு திருத்தேர்கள் ரத வீதிகளில் வலம் வந்த நிலையில் திருத்தேரை பக்தர்கள் தடி போட்டும் வடம் பிடித்து இழுத்தும் தேரோட்டமானது நடைபெற்றது. இந்த விழாவில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா, நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story