தினசரி காய்கறி சந்தையை காணொளி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மக்கள் பயன்பெற தினசரி காய்கறி சந்தை திறப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி காய்கறி அங்காடியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் சேர்மன் உமா மகேஸ்வரி, தென்காசி மாவட்ட பொருளாளர் இல, சரவணா, சங்கரன்கோவில் திமுக நகரச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story