விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5,000-க்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள், விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு 15 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில் நேற்று மாலையில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் தொழிற்சாலையில் பதிவு புரியும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 10% கூலி உயர்வு வழங்குவது எனவும், வீடு சார்ந்த விசைத்தறி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு 16 சதவீதம் கூலி உயர்வு தருவதும் எனவும் முடிவு செய்யப்பட்டது, இதில் அரசு உயர் அதிகாரிகள் விசைத்தறி உரிமையாளர்கள் தொழிலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.