வள்ளலார் பள்ளியில் சிட்டுக்குருவி தின விழா

வள்ளலார் பள்ளியில் சிட்டுக்குருவி தின விழா

 சிட்டுக்குருவி தின விழா

சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினவிழா மற்றும் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினவிழா மற்றும் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட மருந்து வணிகர் சங்கத் தலைவர் விஜயகுமார், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், வணிகர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். சிட்டுக்குருவி பற்றி வாசவி கிளப் தீபா சுகுமார், ரமலான் நோன்பின் முக்கியத்துவம் குறித்து திருக்குறள் பேரவை பொருளாளர் சாதிக் பேசினர். பேருராட்சி சேர்மன் ரோஜாரமணி நோன்பு கஞ்சி வழங்கி தொடங்கி வைத்தார். சிட்டுக்குருவி பற்றி ஓவியம், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வணிகர் சங்க மாவட்ட செயலாளர் மதியழகன் பரிசு வழங்கினார். விழாவில், சங்கராபுரம் தாலுகா மருந்து வணிகர் சங்கத் தலைவர் பழனிவேல், திருக்கோவிலுார் விவேகானந்தன், கல்வராயன்மலை சரவணன், ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். சந்திரசேகர் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story