சங்கடஹரசதுர்த்தி : விநாயகருக்கு சிறப்பு பூஜை

X
ஸ்ரீவிநாயகர்
சங்ககிரி, வி.என்.பாளையம் ஸ்ரீ விநாயகர் கோவிலில் நடந்த சங்கடஹர சதுர்த்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ விநாயகர் சுவாமிக்கு சங்கடஹரசதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சங்கடஹரசதுர்த்தியையொட்டி ஸ்ரீ விநாயகர் சுவாமிக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீவாதரனை காண்பித்து பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர். பக்தர்களுக்கு பிரதசாதம் வழங்கப்பட்டது.
Next Story
