உதகை நகரில் உலா வந்த கிறிஸ்துமஸ் தாத்தா

உதகை நகரில் உலா வந்த கிறிஸ்துமஸ் தாத்தாவை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டம் உதகையில் சான்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாதா ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். குழந்தைகளை மகிழ்விக்கும் நோக்கிலும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்காகவும் கிறிஸ்து பிறப்பை அறிவிக்க இந்நிகழ்ச்சி உதகை நகரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சான்டா கிளாஸ் ஊர்வலம் இன்று நடைப்பெற்றது. உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தோமையர் ஆலயத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் மத்திய பேருந்து நிலையம், லோயர் பஜார், நகராட்சி சந்தை, கமர்சியல் சாலை, சேரிங் கிராஸ் உட்பட நகரின் முக்கிய வீதி வழியாக வந்தது.

இந்த ஊர்வலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து நகர வீதிகளில் உல வந்த கிறிஸ்துமஸ் தாத்தாவை குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் சாலை ஓரத்தில் நின்று கண்டு ரசித்தனர்.

Tags

Next Story