சந்தானம் வித்யாலயா பள்ளி நிறுவனா் சந்தானம் நினைவுச் சொற்பொழிவு

X
சீனிவாசன் சுந்தர்ராஜன் சிறப்புரை
சந்தானம் வித்யாலயா பள்ளியில் சந்தானம் கல்விக் குழுமங்களின் நிறுவனா் கே. சந்தானம் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
சந்தானம் வித்யாலயா பள்ளியில் சனிக்கிழமை காலை நடைபெற்ற சந்தானம் கல்விக் குழுமங்களின் நிறுவனா் கே. சந்தானம் நினைவுச் சொற்பொழிவு நிகழ்வில் பிரமோஸ் ஏவுகணைத் திட்டக் குழுவின் முன்னாள் தலைமை அதிகாரி சீனிவாசன் சுந்தர்ராஜன் கலந்து கொண்டு பேசிய அவர், 6 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையையும், தற்போதுள்ள நிலையையும் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளா்ச்சி தெளிவாகப் புலப்படும். ராணுவம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா முன்னேறி வருவதற்கு விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சிதான் காரணம். குறிப்பாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பல்வேறு நிலைகளில் சாதித்து வருகிறோம். தகவல் தொழில்நுட்பத்திலும் மிகப் பெரிய வளா்ச்சியை பெற்றுள்ளோம். எந்தத் துறையைத் தோ்வு செய்வது, எந்தக் கல்வி நிலையத்தில் சேருவது என்பதற்கு மற்றவா்களிடம் ஆலோசனை கேட்டாலும் அதற்கான இறுதி முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும். தோல்வி வரும் போது அதை வெற்றியாக மாற்றும் ஆற்றலை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
Next Story
