சப்ளம்மா கோவில் திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

சப்ளம்மா கோவில் திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

சப்ளம்மா கோவில் திருவிழா 

கிருஷ்ணகிரி மாவட்டம், சப்ளம்மா கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே பல ஆண்டுகள் பலமை வாய்ந்த பிரசித்திப்பெற்ற சப்ளம்மா கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஒசூர் கெலவரப்பள்ளி அணை அருகே அமைந்துள்ளது சப்ளம்மா கோவில், இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் கொண்ட திருவிழா நடைப்பெறுவது வழக்கம் இந்தாண்டு தொடங்கிய சப்ளம்மா கோவில் திருவிழாவின் கடைசி நாளான நேற்று இரவு கெலவரப்பள்ளி சுற்றியுள்ள நந்திமங்கலம்,ஆவலப்பள்ளி உள்ளிட்ட 50 க்கும் அதிகமான கிராமங்களின் உள்ளூர் தேவதைகளை அலங்கரித்து வண்ண விளக்குகளுடன் பிரகாசித்த பல்லக்குகளில் அமர்த்தப்பட்டன.

சப்ளம்மா கோவில் சுற்றிலும் அலங்கரிக்கப்பட்ட 80 பல்லக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வான வேடிக்கைகளுடன் நாளவிடைவில் அழிந்து வரும் கிராமத்து பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், பொய்கால் குதிரையாட்டம், தெருக்கூத்து உள்ளிட்டவை ஒரு சில கிராமங்களில் மட்டுமே நடைபெறுவதால் அவற்றை காண சிறியவர்கள், முதல் முதியவர்கள் வரை படையெடுத்து வந்திருந்திருந்த சப்ளம்மா கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைப்பெற்றன.

திருவிழாவில் பங்கேற்க வந்த பக்தர்களுக்கு காலை முதல் நள்ளிரவு வரை 15,000 பக்தர்களுக்கு 7வகையான அறுசுவை உணவு காலை முதல் நள்ளிரவு என தொடர்ந்து அன்னதானமாக வழங்கப்பட்டது 50கிராமங்களை சேர்ந்த உள்ளுர் தேவதைகள் ஒரே இடத்திற்க்கு கொண்டு வரப்பட்டிருந்ததால் பெண்கள் உட்பட பொதுமக்கள் ஆர்வத்துடன் பூஜைகளை செய்தனர்.

இரவு முழுவதும் நடைப்பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஓசூரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டு அம்மனை தரிசித்து கோவில் திருவிழாவினை கண்டுகளித்தனர். பின்னர் பாரம்பரிய முறையில் கேளிக்கை நாடகமும் நடத்தப்பட்டதில் சுற்று பகுதியை சேர்ந்தவர்கள் கூட்டாக இணைந்து நாடகம் நடித்ததை பலரும் கண்டு ரசித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story