மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி

மரகன்று வழங்கும் நிகழ்வு

வந்தவாசியில் பிரஞ்ச் ஆங்கிலேய படைக்கான போர் நடந்த 264 வருட தினம் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை டிஎஸ்பி வழங்கினார்.

வந்தவாசியில் பிரஞ்ச் ஆங்கிலேய படைக்கான போர் நடந்த 264 வருட தினம் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை டிஎஸ்பி வழங்கினார். இந்த போர் குறித்து எக்ஸ்னோரா சங்கம்சார்பில் கருத்தரங்கம் மற்றும் வந்தவாசி போரில் பயன்படுத்திய பீரங்கி தெற்கு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மாணவர்களுக்கு போர் குறித்த விபரம் தெரிவிப்பதற்கான நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு எக்ஸ்னோரா சங்க தலைவர் மலர்சாதிக் தலைமை தாங்கினார். செயலாளர் வி.எல்.ராஜன், நிர்வாகிகள் பிரபாகரன், குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக தாசில்தார் பொன்னுசாமி, டிஎஸ்பி ராஜீ விழுப்புரம் தொல்லியல் துறை சார்ந்த காப்பாட்சியர் அ. ரஷீத் கான் ஆகியோர் கலந்துகொண்டு வந்தவாசி போர் குறித்த செயல்பாடுகளையும், தக வமைப்புகள் பற்றிய விவ ரங்களை குறிப்பிட்டார். மேலும், வந்தவாசி கோட்டையின் அமைப்பு பற்றியும், வந்தவாசி அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதைகள் பற்றியும், சுற்றுப்புற செயல்பாடுகளைப் பற்றியும், கோட்டை பகுதியில் கிடைத்த பொருட்கள் பற்றியும் விளக்கி பேசினார்.

இதில், மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்கள் ராமு கவிதா, பாபு, தட்ணா மூர்த்தி, தனிப்பிரிவு ஏட்டு எல்லப்பன் உள்ளிட்டபல ரும் கலந்துகொண்டனர். முடிவில்ரெட்கிராஸ் சங்க செயலாளர்பா.சீனுவாசன் வந்தவாசியில் பிரஞ்ச் ஆங்கிலேய படைக்கான போர் நடந்த 264 வருட தினத்தையொட்டி நடந்த கருதரங்கில் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை டிஎஸ்பி ராஜீ வழங்கினார். பிரஞ்சு ஆங்கிலேயே படைக்கு இடையே கடந்த 1760ம் ஆண்டு நடந்த போரில் ஆங்கிலேயே படை வெற்றி பெற்று இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி அமைவதற்கு அடித்தளமாக அமைந்த போர் வந்தவாசி போர் என்பது வரலாறு என தெரிவித்தனர்.

Tags

Next Story