வேம்பார் தூய ஆவியார் ஆலயத்தில் சப்பர பவனி

வேம்பார் தூய ஆவியார் ஆலயத்தில்  சப்பர பவனி

சப்பர பவனி 

வேம்பார் நிம்பை நகர் தூய ஆவியார் ஆலய பெருவிழாவில் புனித செபஸ்தியாரின் சப்பர பவனி நடந்தது. இதில் திரளான இறை மக்கள் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் என்பது ஏழுகடல் துறையின் முதல் துறை என பெயர் பெற்ற ஊராகும். இங்கு நடந்த புனித செபஸ்தியாரின் சப்பர பவனி திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் ஒவ்வொரு நாளும் நிர்வாக குழுவினர், புனிததோமையார், புனித செபஸ்தியார், அன்பு சமூகங்கள், அருட்சகோதரிகள், ஆசிரியைகள், இளம்பெண் சபையினர், உதயதாரகை இளையோர் திருக்குடும்ப சபையோர், பாலர் சபையார் குழுவினரின் பங்களிப்போடு திருப்பலி, ஜெபமாலை, பிரார்த்தனை, அருளுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளான இன்று புனித செபஸ்தியாரின் 310ம் ஆண்டு சப்பர பவனி நடந்தது. முன்னதாக ஆலயத்துடன் இணைந்த புனித செபஸ்தியார் நடுநிலைப்பள்ளியின் விளையாட்டு மற்றும் ஆண்டு விழாவும் நடந்தது. திருவிழாவில் வேம்பார் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் திரளான இறை மக்கள் கலந்து கொண்டு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். திருவிழா ஏற்பாடுகளை தூய ஆவியார் ஆலய பங்குத்தந்தை, மரியின் ஊழியர் சபை அருள்சகோதரிகள், நிர்வாக குழுவினர், நிம்பை நகர் இறைமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story