கீழ்வேளூர் அச்சலிங்க சுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லாக்கு

கீழ்வேளூர் அச்சலிங்க சுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லாக்கு

சப்தஸ்தான பல்லாக்கு  புறப்பாடு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அச்சலிங்க சுவாமி கோயிலில் சப்தஸ்தான  பல்லாக்கு 7 ஊர்களுக்கு புறப்பட்டது. 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அச்சலிங்க சுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லாக்கு 7 ஊர்களுக்கு புறப்பட்டது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் சுந்தர குஜாம்பிகை உடனுறை அச்சலிங்க சுவாமி கோயில் (கல்யாண சுந்தரர்) சித்திரை ஏக தின உற்சவ திருவிழாகடந்த 18ஆம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது,

போய் தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் படி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 23ம் தேதி இரவு ஓலை சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா காட்சி நடைபெற்றது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி தே ரயில் இருந்து புறப்பட்டு 7 ஊர் சிவன் கோயில்களுக்கு சப்தஸ்தான பல்லாக்கு வீதி உலா கோயிலில் இருந்து புறப்பட்டு,

அகர கடம்பனூர் பெருமாள் கோயில் மற்றும் கீழ்வேளூர் மேல அக்ரஹாரம் கோயில், கோயில் கடம்பனூர், திருக்கண்ணங்குடி, ஆகிய சிவன் கோயில்களுக்கு வீதி உலா காட்சி நடைபெற்றது அதைத் தொடர்ந்து இன்று மாலை மற்றும் இரவு பட்டமங்கலம் வடக்காளத்தூர் தேவூர் சொட்டால் வண்ணம் கூத்தூர்,

ஆகிய சிவன் கோயில்களுக்கும் வீதி உலா காட்சி நடைபெறுகிறதுபல்லாக்கில் வந்த கல்யாணசுந்தரர் அம்பாள் சுவாமிகளுக்கு ஏழு ஊர்களிலும் பக்தர்கள் தங்கள் வீட்டு வாசலில் அர்ச்சனை செய்து வழிபட்டனர் அதைத் தொடர்ந்து நாளை கோயில் முன் உள்ள சரவண பொய்கை திருக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது,

வரும் 28ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் பதாஸ்தான பிரவேசத்துடன் விழா நிறைவு பெறுகிறு விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பணியாளர்கள், உபதாரர்கள், கிராமவாசிகள் செய்து வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story