சர்வசித்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
சர்வசித்தி மாரியம்மன்
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ சர்வசித்தி மாரியம்மன் கோவில் பொங்கல்விழா நடைபெற்றது. ஸ்ரீ சர்வசித்தி மாரியம்மன் கோவில் திருவிழா ஏப்ரல்.23ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அதனையடுத்து தினசரி அம்மனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
இதனையடுத்து சுவாமிக்கு சந்தனம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சக்தி அழைத்தலும், பக்தர்கள் அலகு குத்தியும், பூவினால் அலங்கரிக்கப்பட்ட கரகங்கள், தீ சட்டிகளை கைகளில் ஏந்தியும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமியை வழிப்பட்டனர்.