சேலம் புதூர் கல்லாங்குத்தூர் மாரியம்மன் கோவிலில் சத்தாபரணம்

சேலம் புதூர் கல்லாங்குத்தூர் மாரியம்மன் கோவிலில் சத்தாபரணம்

சத்தாபரணம்

சேலம் புதூர் கல்லாங்குத்தூர் மாரியம்மன் கோவிலில் சத்தாபரணம். சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த அம்மன்.
சேலம் புதூர் கல்லாங்குத்தூர் மாரியம்மன் கோவில்விழா கடந்த 22-ந்தேதி கரகம் பாலித்தலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கடந்த 23-ந்தேதி பால் குட ஊர்வலம் நடைபெற்றது. நேற்று முன்தினம் பூங்கரகம், அலகு குத்துதல், தொடர்ந்து கிடா வெட்டுதல் நடைபெற்றது. நேற்று காலை பக்தர்கள் பலர் சாமி வேடம் அணிந்தபடி கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து இரவு சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ராஜகாளியம்மன் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் திருவீதி உலா (சத்தாபரணம்) நடைபெற்றது. கோவில் முன்பு தொடங்கிய அம்மன் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மைக்காரர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story