சத்தியமங்கலம் ; பைக்கை பந்தாடிய யானை - உயிர் தப்பிய வாலிபர்கள்

சத்தியமங்கலம் ; பைக்கை பந்தாடிய யானை - உயிர் தப்பிய வாலிபர்கள்

பைக்கை உதைத்து விளையாடிய யானை 

சத்தியமங்கலம் அருகே சாலையில் கிடந்த பைக்கை பின்னங்காலால் உதைத்து காட்டு யானை பந்தாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் தீவனம் மற்றும் தண்ணீர் ஐ தேடி பகல் நேரங்களில் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடமாடுகின்றன. இதற்கிடையே சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள இருட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இரு வாலிபர்கள் நேற்று மதியம் கடம்பூரில் இருந்து இருட்டிபாளையம் நோக்கி பைக்கில் சென்றனர்.

அடர்ந்த வனப்பகுதி சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது,சாலையில் ஒரு காட்டு யானை கம்பீரமாக சாலையில் நடமாடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இருவரும் அச்சத்தில் பைக்கை சாலையில் போட்டுவிட்டு யானையிடமிருந்து தப்பிப்பதற்காக வனப்பகுதிக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர்.' அப்போது அங்கு வந்த காட்டு யானை கீழே கிடந்த பைக்கை தனது பின்னங்காலால் உதைத்து சாலையோர வனப்பகுதியில் தள்ளி பந்தாடியது. இந்த காட்சியை வாலிபர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story