அறங்காவலர் குழுவில் பெண்கள் இருப்பது திருப்தி - மதுரை ஐகோர்ட்

அறங்காவலர் குழுவில் பெண்கள் இருப்பது திருப்தி - மதுரை ஐகோர்ட்

மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுவில் பெண்கள் இருப்பது திருப்தி அளிக்கிறது - மதுரை ஹைகோர்ட்

மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுவில் பெண்கள் இருப்பது திருப்தி அளிக்கிறது - மதுரை ஹைகோர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதிமீறலும் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு நியமனத்தை ரத்து செய்யக் கோரிய உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணையை செய்த நீதிபதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதிமீறலும் இல்லை என்று கூறி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது. அறங்காவலர் குழுவில் 3 பெண்களை இடம் பெறச் செய்தது நீதிமன்றத்துக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ருக்மணி பழனிவேல்ராஜன் அறங்காவலராக நியமனம் செய்யப்பட்டதில் என்ன தவறு உள்ளது? என்றும் நீதிபதிகள் மனுதாரர் வழக்கறிஞர் மகாராஜனுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story