ரூ.3. 22 கோடியில் கோவில் அலுவலர் மற்றும் பூசாரிகள் குடியிருப்பு கட்டிடம் திறப்பு
கோயில் அலுவலக கட்டிடம் திறப்பு
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் ரூ.3. 22 கோடி மதிப்பீட்டில் கோவில் அலுவலர் மற்றும் பூசாரிகள் குடியிருப்பு கட்டிடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் .
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது. இந்த கோவிலில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பூசாரிகளுக்கு குடியிருப்பு வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி பல மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருந்த நிலையில் சுமார் மூன்று கோடியே 22 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 12 குடியிருப்புகள் அடங்கிய குடியிருப்பு வளாகத்தை இன்று தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் தொடர் நிகழ்ச்சியாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி தலைமையில் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சாத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய திமுக கழகச் செயலாளர்கள் மற்றும் கோவில் நிர்வாக அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.