சிதம்பரேஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி விழா

சிதம்பரேஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி விழா
X

சனீஸ்வரன் 

கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சியையொட்டி கடந்த 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தினமும் காலை, மாலை நவக்கிரஹங்களுக்கு கலச பூஜை, யாகம் நடந்தது. நேற்று 20-ம் தேதி மாலை சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. சனி பகவான் நேற்று மாலை 5:00 மணி 22 நிமிடநேரத்தில் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசித்தார். பின் மகா தீபாராதனை 27 நட்சத்திரம், 12 ராசிக்காரர்களுக்கு மகா சங்கல்பம் செய்து பூஜைகள் செய்தனர்.


Tags

Next Story