SBCID தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையில் சிறப்பாக செயல்பட்ட உதவி ஆய்வாளர்களுக்கு மத்திய அரசு விருது

SBCID தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையில் சிறப்பாக செயல்பட்ட உதவி ஆய்வாளர்களுக்கு மத்திய அரசு  விருது
X
SBCID தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையில் சிறப்பாக செயல்பட்ட உதவி ஆய்வாளர்களுக்கு மத்திய அரசு விருது
(SBCID )தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையில் சிறப்பாக செயல்பட்ட உதவி ஆய்வாளர்களுக்கு மத்திய அரசு வழங்கும் உத்கிரிஷ்ட் சேவா பதக்கத்தை நாமக்கலில் 3 பேர் பெற்றனர். ராசிபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சார்லஸ் என்பவர் விருது பெற்றார். சேலம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனி பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் உள்ள காவலர்கள் எவ்வித குற்றச் சம்பவங்கள் ஈடுபடாமல் மற்றும் நல்லடக்கத்துடன் பணியாற்றி வரும் 6 காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதில் நாமக்கல் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சார்லஸ்,நாகராஜன், சுந்தர்ராஜன் என 3 உதவி ஆய்வாளர்களுக்கு மத்திய அரசு உள்துறை அமைச்சகம் வழங்கும் உத்கிரிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது. மத்திய அரசால் வழங்கப்பட்ட விருதை சேலம் சரக தனி பிரிவு குற்ற புலனாய்வுத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் பூபதி ராஜன் வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார்... இந்த நிலையில் ராசிபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ள சார்லஸ் என்பவர் விருதினை பெற்றது குறிப்பிடத்தக்கது..
Next Story