ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்  விசாரணை

  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவி வர்மா விசாரணை 

எச்.புதுப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் ரவி வர்மா விசாரணை நடத்தினார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே எச். புதுப்பட்டியில் அரசு ஆதிதிராவிட மாணவியர் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பட்டியல் இன மாணவியர்கள் 56 பேர் தங்கி அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் அடிப்படையில் மிகவும் வறுமை நிலையில் வாழும் ஏழை மாணவிகள் ஆவர். இங்கு உள்ள தங்கும் விடுதியில் மாணவிகளுக்குக் கழிப்பிட வசதிகள் கூட சரியாக செய்து தராததால் அருகில் உள்ள விவசாய நிலப் பகுதிகள், முட்புதர்கள், ஓடைகள் போன்ற பகுதிகளை கழிப்பிடமாக அச்சத்துடனும், பாதுகாப்பு இல்லாத நிலையிலும் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல குடிநீர் வசதி, குளிப்பதற்கும் அருகில் உள்ள விவசாய கிணற்று பகுதிகளுக்கு சென்று பக்கெட் மூலமாக தண்ணீர் எடுத்து கொண்டு நெடுஞ்சாலையை கடந்து விடுதியில் குளிக்கும் பரிதாப நிலையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவிகள் தங்கும் விடுதி முன்பு உள்ள தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விடுதி காப்பாளர் சித்ரா, பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா மாணவிகளிடம் போராட்டத்தை கைவிடும் படியும், உங்களது அடிப்படை தேவைகள் உடனடியாக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று செய்து தருவதாகவும் உறுதியளித்தனர். பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அடிப்படை வசதிகள் இல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக நேற்று தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குனர் ரவி வர்மா புதுபட்டியில் உள்ள ஆதி திராவிடர் மாணவிகள் தங்கும் விடுதியில் விசாரணை மேற்கொண்டார்.

Tags

Next Story