போலியான ஸ்கிரீன்ஷாட்டை காட்டி மோசடி - சிசிடிவியில் சிக்கிய இளைஞர்கள்

தேனியில் செல்போன் உதிரிபாக கடையில் பொருட்களை வாங்கிவிட்டு கடையின் பெயருடன் பணம் செலுத்தியது போன்று போலியான ஸ்கிரீன்ஷாட் பதிவை கொண்டு மோசடியில் ஈடுபட்ட இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே செல்போன் எலக்ட்ரானிக்ஸ் பஜார் பகுதியான கடற்கரை நாடார் தெருவில் மீனாட்சி செல்போன் உதிரி பாகம் கடை செயல்பட்டு வருகிறது இந்த கடையில் நேற்று மாலை இரண்டு இளைஞர்கள் செல்போன் உதிரி பாகங்களை வாங்குவதற்காக மீனாட்சி செல்போன் உதிரிபாக விற்பனை செய்யும் கடைக்கு வருகை தந்தனர் 700 ரூபாய் மதிப்பில் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு போன் பே மூலம் ஸ்கேன் செய்வதாக கூறி ஸ்கேன் செய்துவிட்டு 700 ரூபாய் அனுப்பியதற்கான ஆதாரத்தை தங்கள் போனில் காட்டினர்.

ஆனால் கடையில் வைத்திருந்த ஸ்கேனரில் பணம் பெற்றதற்கான அறிவிப்பு வராததால் ராஜஸ்தானில் உள்ள கடையின் உரிமையாளரிடம் பணம் வந்து விட்டதா என கேட்டு சொல்கிறேன் எனவும் அதுவரை காத்திருங்கள் என இளைஞரிடம் கடை ஊழியர் கூறியிருந்தார் கடையின் உரிமையாளரிடம் ஊழியர் கேட்கவே வங்கிக் கணக்கில் பணம் இன்னும் வரவில்லை இளைஞர்களிடம் மீண்டும் செலுத்துமாறு கூறிய நிலையில் இளைஞர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து மாயமானது தெரிய வந்தது க

டையில் பொருட்கள் வாங்க வருவதற்கு முன்பே கடையின் பெயரை வைத்து 700 ரூபாய் பணம் செலுத்தியது போல போலியாக எடிட் செய்த ஸ்க்ரீன் ஷாட்டை காண்பித்து இளைஞர்கள் மோசடியில் ஈடுபட்டனர் என அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்தது இதுகுறித்து கடையின் உரிமையாளர் புகார் எதுவும் தெரிவிக்காத நிலையில் கடற்கரை நாடார் தெருவில் உள்ள செல்போன் உதிரிபாக கடைகளில் தொடர்ந்து இதுபோன்று மோசடி சம்பவம் நடைபெற்று வருவதால் தேனி நகர போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடை உரிமையாளர்களின் கோரிக்கையாக இருக்கின்றது

Tags

Next Story