ராமநாதபுரத்தில் மோசடியில் ஈடுபட்டவர் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரத்தில் மோசடியில் ஈடுபட்டவர் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பு

மனு அளிக்க வந்தவர்கள் 

ராமநாதபுரத்தில் குறைந்த வட்டிக்கு நகை கடன் தருவதாக ஏமாற்றி நடந்த மோசடி செய்த நபரை பிடித்து காவல்துறை கண்காணிப்பாளரிடம் மக்கள் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம்: ரூ 5 கோடி மதிப்புள்ள தங்க நகை அடகு வைத்த நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றி தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் மகன் ஓராண்டாக தலைமறைவாக இருந்த நிலையில்,துக்க நிகழ்ச்சிக்கு வந்த போது பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்ததால் ராமநாதபுரம் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைங்குடி பகுதியில் அடகு கடை வைத்திருந்தவர் திமுக கவுன்சிலர் கமலக்கண்ணி என்பவரின் மகன் சத்யராஜ். இவர் திருப்பாலைக்குடி, முள்ளிமுனை, மோர் பண்ணை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்களிடமும் மீனவ பெண்களிடமும் தங்க நகைகளை அடகு பெற்று குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பதாக வலை விரித்துள்ளார். இந்த ஆசை வார்த்தையை நம்பிய அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் இவரிடம் தங்களுடைய தங்க நகைகளை குறைந்த வட்டி என நினைத்து அடகு வைத்து உள்ளனர்.

திடீரென கடந்த ஆண்டு ஒரு நாள் தன்னுடைய அடகு கடையை மூடிவிட்டு நகைகளுடன் அங்கிருந்து தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மீனவர்களும், மீனவ பெண்களும் திருப்பாலைக்குடி காவல் நிலையத்திலும், ராமநாதபுரம் எஸ் பி அலுவலகத்திலும் திமுக கவுன்சிலர் மகன் சத்யராஜ் மீது புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சத்யராஜ் நேற்று மாலை திருப்பாலைக்குடியில் அவரது உறவினர் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்தபோது அந்த கிராமத்து மக்கள் சத்யராஜை சுற்றி வளைத்து பிடித்தனர்.

தங்களிடம் அடகு பிடித்த நகைகளை திரும்ப தர சொல்லி அவரை சுற்றி வளைத்து பிடித்து ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர். கோடிக்கணக்கான ரூபாய் அடகு நகைகளை மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் மகனை பிடித்து கிராம மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story