குடிநீர் தட்டுப்பாடு மக்கள் பரிதவிப்பு!

குடிநீர் தட்டுப்பாடு மக்கள் பரிதவிப்பு!

குடிநீர் தட்டுப்பாடு

ஆழ்துளை கிணற்றை நம்பியே விவசாயம் செய்து வந்த நிலையில், தண்ணீர் பற்றாக்கு றையால் பயிர்கள் வாடிவருவதால் கவலை அடைந் துள்ளனர். மழை பெய்தால் மட்டுமே இதற்கு தீர்வு என்பதால் கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகளும், பொதுமக்களும் காத்திருக்கின்றனர்.
சுந்தர்வகோட்டை: வானம் பார்த்த பூமியான கந்தர்வகோட்டை தாலுகாவில் மழையை நம்பியே விவசாயம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. மேலும், கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், கிணறு, ஆழ்துளை கிண றுகளில் நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட் டது. ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாதால் பல ஊராட்சி நிர்வாகங்களால் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். கந்தர்வ கோட்டை சுற்றுவட்டார பகுதிகளான சுந்தம்பட்டி, ராசாப்பட்டி, பெரிச்சுவண்ணியம்பட்டி, நடுப்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, புதுநகர், பிசானத்துார், பழைய கந்தர்வகோட்டை, தச்சங்குறிச்சி, கோமாபுரம், மட் டங்கால், வேம்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் ஆழ்துளை கிணற்றை நம்பியே விவசாயம் செய்து வந்த நிலையில், தண்ணீர் பற்றாக்கு றையால் பயிர்கள் வாடிவருவதால் கவலை அடைந் துள்ளனர். மழை பெய்தால் மட்டுமே இதற்கு தீர்வு என்பதால் கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகளும், பொதுமக்களும் காத்திருக்கின்றனர்.

Tags

Next Story