ஒற்றை காட்டெருமையால் அச்சம்

ஒற்றை காட்டெருமையால் அச்சம்

காட்டெருமையால் அச்சம்

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டெருமையால் பொதுமக்கள் அச்சம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக வனப்பகுதியை விட்டு காட்டெருமைகள் வெளியேறி நகர்ப்பகுதிக்குள் உலா வருவதும், குடியிருப்பு பகுதிக்குள் முகாமிடுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் அதிக மக்கள் கூடும் இடமான நாயுடுபுரம் குடியிருப்பு பகுதியில் இன்று மாலை வேளையில் திடீரென ஒற்றை காட்டெருமையால் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனை வனத்துறையினர் கவனம் செலுத்தி பெரும் அசாம்பவதம் ஏற்படுவதற்கு முன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வேண்டுக்கோள் எழுந்துள்ளது.

Tags

Next Story