பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயம்

பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயம்

விபத்து ஏற்படும் அபாயம்

மதுரவாயல் - தாம்பரம் புறவழி சாலையில் பேனர்கள் அதிகம் வைக்கப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரவாயல் -- தாம்பரம் புறவழிச்சாலை மற்றும் வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மீண்டும் விளம்பர பேனர்கள் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில் அமைக்கப்பட்ட விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இதையடுத்து, 'நகரின் எந்த பகுதியிலும் விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விளம்பர பலகைகள் எண்ணிக்கை குறையாமல், அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில், மதுரவாயல் -- தாம்பரம் புறவழிச் சாலை மற்றும் மதுரவாயல் -- பூந்தமல்லி நெடுஞ்சாலை வானகரம் ஊராட்சி பகுதி, கோயம்பேடு -- பூந்தமல்லி நெடுஞ்சாலை என, பல இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பது வாடிக்கை. இது குறித்து நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது, தாம்பரம் -- மதுரவாயல் புறவழிச்சாலை மற்றும் மதுரவாயல் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மீண்டும் பேனர்கள் அதிகரித்துள்ளன. இவற்றை முறையாக கண்காணித்து, விபத்துகள் ஏற்படும் முன் தடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story