ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் சாரல் மழை

ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் சாரல் மழை

ராசிபுரத்தில் மழை

குளிர்ச்சியான காற்றால் பொதுமக்கள் மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த சில தினங்களாக வெயில் அதிகரித்தும் மற்றும் வானம் மேகமூட்டவுடன் தொடர்ந்து மாறி மாறி காணப்பட்டு வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டவுடன் காணப்பட்ட நிலையில் மாலை வேளையில் திடீரென சாரல் மழை பெய்து தொடர்ந்து மிதமான மழை ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான பல்வேறு இடங்களில் இதே போல் மிதமான மழை பெய்தது.

Tags

Next Story