வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம்
திட்ட பயிற்சியில் கலந்து கொண்டவர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் வட்டாரம், மாநில விரிவாக்க சீரமைப்புதிட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமான மேபப்பத்துறை மற்றும் துரிஞ்சாபுரம்;கிராமத்தில் குழு தொடங்கி, ரபி பருவத்திற்கு ஏற்ற தொழில் நுட்பங்கள் வழங்கப்பட்டது. வே
ளாண்மை உதவி இயக்குநர் துரிஞ்சாபுரம் ஜெ.கோபாலகிருஷ்ணன், வழி காட்டுதலின் படியும் வேளாண்மை அலுவலர் அனுசுயா மேற்பார்வையில் அட்மா திட்டத்தில் வறபெற்றுள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த திட்டத்தில் குழுக்களுக்கு கோவிந்தராஜன் உதவி வேளாண்மை அலுவலர் தற்போதுள்ள திட்டங்கள் மற்றும் மான்யங்கள் குறித்து விளக்கம் அளித்தார் அதோடு உயிர் உரங்கள் விநியோகம் செய்தார். ரபி பருவத்திற்கான தொழில் நுட்பங்கள் மற்றும் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார் மேலும் செல்வம் உதவி தோட்டக் கலை அலுவலர் தோட்டக்கலைத்துறை சார்ந்த மானியத் திட்டங்கள் மற்றும் காய்கறி சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு தெளிவாக கூறினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாஸ் மண் பரிசோதனை, கோடை உழவு பற்றி விளக்கம் அளித்தார். மேலும் உதவி தொழில்நுட்ப மேலாளர் வெற்றிசெல்வன் விதை நேர்த்தி மற்றும் விதை கடினப்படுத்துதல்,உழவன் செயலி பதிவிறக்கம் செய்து காண்பித்து அதன் பயன்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.
மேலும்; உதவி வேளாண்மை அலுவலர் நந்தகுமார் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தி பயிற்சியில் கலந்துகொண்டனர்.