துறைமுக யூனியன் சார்பில் கல்வி உதவித்தொகை

துறைமுக யூனியன் சார்பில் கல்வி உதவித்தொகை

 கல்வி உதவித்தொகை

தூத்துக்குடியில் துறைமுகம் யூனியன் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுக யுனைடெட் ஜெனரல் ஒர்க்கர்ஸ் சங்கத்தின் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட், புக், பேக் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க செயல் தலைவர் தேவதாஸ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜி.ஜான் கென்னடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உபகரணங்கள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் சங்க தலைவர் தலைவர் கிளின்டன் பெர்னாண்டோ, பிஎஸ்ஏ சிகால் ஸ்டாப் யூனியன் தலைவர் கிங்ஸ்டன், துணைத் தலைவர் லிவிங்ஸ்டன்துணை பொதுச் செயலாளர் ஜூட் ரஞ்சித், சீனிவாசன் ,சரவணகுமார், பிரபாகர் சந்திரன், மோசஸ், சங்க மகளிர் அமைப்பு சார்பில்ஜெயா மல்லிகா, தலைமலை ஹரிஹரசுதன், கணிஸ்டன் உள்பட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். .

Tags

Next Story