சி.பி.எஸ்.இ., பள்ளியில் நாளை ஸ்காலர்ஷிப் தகுதித் தேர்வு

சி.பி.எஸ்.இ., பள்ளியில் நாளை ஸ்காலர்ஷிப் தகுதித் தேர்வு

தியாகதுருகம் தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் தகுதி தேர்வு நாளை நடைபெற உள்ளது.


தியாகதுருகம் தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் தகுதி தேர்வு நாளை நடைபெற உள்ளது.
தியாகதுருகம் மவுண்ட் பார்க் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டுதோறும் பிளஸ் 1 சேர்க்கையில் தகுதி அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி கட்டணச் சலுகை 100 சதவீதம் அளிக்கப்படுகிறது. அதற்கான தகுதி தேர்வு நாளை 14ம் தேதி காலை 10:00 மணிக்கு மவுண்ட் பார்க் சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் நடக்கிறது. சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ள மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம். தேர்வு 60 நிமிடம் நடக்கும். இத்தேர்வில் பத்தாம் வகுப்பு 5 பாடங்களிலும் தலா 10 ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். அனுமதி இலவசம். இத்தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., பிளஸ் 1 சேர்க்கையில் கல்வி கட்டணம் 100 சதவீதம் ஸ்காலர்ஷிப்பாக வழங்கப்படுகிறது. தேர்வுக்காக விழுப்புரம், விருத்தாசலம், திருக்கோவிலுார், திருவெண்ணைநல்லுார், வேப்பூர், சங்கராபுரம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் இருந்து இலவச பஸ் இயக்கப்படுகிறது.

Tags

Next Story