முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை

மாவட்ட ஆட்சியர்

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

"மத்திய முப்படைவீரர் வாரியம் புதுதில்லி வாயிலாக முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அமைச்சரின் விருப்புரிமை நிதியிலிருந்து (RMEWF) வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் ஏனைய நிதியுதவிகள் அனைத்தும் பெற, முன்னாள் படைவீரர்கள் ஃ விதவையர்கள் தங்களது பெயரினை www.ksb.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்த பின்னர், தங்களது தகுதிக்கு ஏற்றார் போல நிதியுதவி பெற்றிட ‘நல திட்டங்கள்’ என்ற தலைப்பில் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துப் பயன் பெறலாம். 1-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மற்றும் பட்டப் படிப்பு பயின்று வரும் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் பட்டப் படிப்பிற்கு இணையதளம் வாயிலாக 01.04.2024 முதல் 30-11-2024 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story