வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு

வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு

மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா 

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் தமிழுக்கு அருத்தொண்டாற்றி வரும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. மாதம் 4 ஆயிரம் ரூபாய், அரசுப் பேருத்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது.மேலும் அவரது மறைவுப்பிறகு அவரது மனைவிக்கு மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது . இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் வயது முதிர்ந்த தமிழறிஞரிடமிருந்து 2023-2024-ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கத் தகுதிகள் என 58 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும் , ஆண்டு வருவாய் 72,000 க்குள் இருக்க வேண்டும் , தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு உள்ளிட்ட நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்கத்தில் இயங்கிவரும் தமிழ் ஊர்ச்சித் துணை இயக்குநர் அலுவகத்தில் டிசம்பர் 31 க்குள் அளிக்க வேண்டுமென் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

Tags

Next Story