BC, MBC பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை - ஆட்சியா் உமா தகவல்

BC, MBC பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை - ஆட்சியா் உமா தகவல்

BC, MBC பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்

BC, MBC பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்

மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகளில் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4000/- கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக்கணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்னுடன் இணைக்க வேண்டும். மேற்படி ஆதார் எண் மற்றும் வங்கி விவரங்களை தமது வருமானச் சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளித்தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசுப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவியர்களது விபரங்களை EMIS (Educational Management Information System) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகத்தை (அறை எண்.28) அணுகியும் மற்றும் 04286-280193 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டும் பயனடையலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story