பள்ளி ஆண்டு விழா

குமாரபாளையத்தில் ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா தாளாளர் செந்தாமரை தலைமையில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக திரைக்கலைஞர் அறந்தாங்கி நிஷா பங்கேற்று பேசினார். இவர் பேசியதாவது: முதல் பென்ச் மாணவர்களை விட, கடைசி பென்ச் மாணவர்கள் தான் வாழ்வில் பெரும்பாலும் சாதனை படைத்துள்ளனர். அவர்கள்தான் புத்தக படிப்புடன் வாழ்க்கை படிப்பையும் சேர்த்து படிக்கின்றனர். பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளை அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். அவர்கள் ஒவ்வொருவர் தனித்துவமாக வெற்றி பெறுவார்கள். பள்ளியில் தான் அடுத்தவர்களுக்கு பகிர்ந்து உண்ணும் பழக்கம் துவங்குகிறது. அப்பாவின் உழைப்பை மதியுங்கள். ஆசிரியர்கள் வசம் அடி வாங்கியவர்கள்தான், வாழ்வில் படும் அடிகளை சமாளிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா பரிசு வழங்கி வாழ்த்தினார்.
