பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

திருச்செங்கோட்டில் தனியார் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.


திருச்செங்கோட்டில் தனியார் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

விருக் ஷா குளோபல் பள்ளியில் நடைபெற்ற 12 ஆம் ஆண்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக பள்ளி மாணவிகள் இறைவாழ்த்து பாடினர். அதனை தொடர்ந்து பள்ளியின் தலைவர் ராஜசேகரன்,மாலதி ராஜசேகரன் சிறப்பு விருந்தினரும் குத்து விளக்கினை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர். பள்ளியின் தாளாளர் ஹரிநிவாஸ் ராஜசேகரன், நிவேதா ஹரிநிவாஸ் அவர்களும் பள்ளியின் முதல்வர் ஹேமாமாலினி பள்ளியின் துணை முதல்வர்.கௌரிசங்கர் மற்றும் தலைமை ஆசிரியை அம்பிகா ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்கினர். விழாவின் சிறப்பு விருந்தினராக Rtn. AKS. V.R. முத்து (இதயம் நல்லெண்ணெய் தலைவர்) கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். 2023 - 2024 ம் ஆண்டு பள்ளியில் நடைப்பெற்ற அத்துணை செய்திகளையும் ஆண்டு அறிக்கையாக (Annual Report) பள்ளியின் முதல்வர் ஹேமாமாலினி வாசித்தார். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரேயா வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் Rtn.. AKS. V.R. முத்து பள்ளியின் கல்வி ஆண்டிற்கான STAR PERFORMER மற்றும் GENERAL PROFICIENCY விருதுகளும், இப்பள்ளியில் 5 மற்றும் 10 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான விருதுகளும், 2022 2023 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் (அவினேஷ், கீர்த்தனா, ஸ்ரீஹரிணி) விருதுகள் வழங்கினார்.மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் இடத்தினைப் பெற்ற மாணவர்களுக்கும் விருதுகளை வழங்கி பாராட்டினை தெரிவித்தார். மேலும் இவ்வாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இப்பள்ளியில் படித்த முடித்துச் சென்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு (ALUMNUS STUDENTS) மாணவர்களையும் அழைத்து அவர்களையும் கௌரவித்தனர். அதனை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. மாணவ மாணவியர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் பார்ப்பவர்களின் கவனத்தை மிகவும் கவர்ந்தது. மாணவர்களின் பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவின் இறுதியாக நன்றியுரையை பதினொன்றாம் வகுப்பு மாணவி சுபிக்க்ஷா வாசித்தார். அதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஆண்டு விழா இனிதே முடிவடைந்தது.

Tags

Next Story