பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம்

பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம்
பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் 68ம் ஆண்டுவிழா நடைபெற்றது.

பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் 68 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி பகுதியில் செயல்படும், மேல்நிலைப் பள்ளியில் 68வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில், பள்ளியின் தாளாளர் கஜ்னபர் அலி தலைமையில் நடைபெற்றது.

பள்ளி விழாவுக்கு வந்த அனைவரையும் பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டி முதன்மை செயலாளர் அஷ்ரப் அலி வரவேற்றார். பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு எஜுகேஷன் சொசைட்டி தலைவர் முகமது ரவி பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல,பொது தேர்வில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ -மாணவியர்க்கு, மன்ற தலைவர் முனைவர் ஜான் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கரூர் பரணி பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பள்ளியில் பயின்ற மாணவ - மாணவிகள், அவர் தம் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஆண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story