பள்ளி ஆண்டுவிழா கொண்டாட்டம்

மண்டபம் அருகே சேது வித்யாலயா பள்ளியின் 17ம் ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது.

மண்டபம் அருகே சேது வித்யாலயா பள்ளியின் 17 -ம் ஆண்டு விழா. ராமேஸ்வரம் , மார்ச்.03- மண்டபம் அருகே சேது வித்யாலயா பள்ளியின் 17-வது ஆண்டுவிழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வேதாளை ஊராட்சி குஞ்சார் வலசையில் உள்ள சேது வித்யாலயா பள்ளியின் 17-வது ஆண்டு விழாவிற்கு பள்ளி தாளாளர் ஆடல் அரசன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக பொருப்பாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தனர். விழாவில் சோவா பாரதி தென் தமிழ்நாடு அறக்கட்டளை உறுப்பினர் பிரியா சிவக்குமார் குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினார். பள்ளி முதல்வர் கவிதா 2023-24-ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார். பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஆண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி மாணவ, மாணவியர்கள் தொகுத்து வழங்கினர். விழாவில் பள்ளி மாணவ, மாணவியரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பள்ளி தாளாளருக்கு குஞ்சார் வலசை கிராமத்தலைவர் அர்சுணன் கிராமத்தின் சார்பில் நினைவு பரிசு வழங்கினார். விழாவில் சேவாபாரதி மாவட்டத் தலைவர் மதிசேகர பாண்டியன் மற்றும் சேவாபாரதி அமைப்பினர், ராமநாதபுரம் மாவட்ட தனியார் பள்ளிகள் நலச்சங்க பொருப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், அருப்புக்காடு கிராமத் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் பள்ளி ஆசிரியர் நன்றி கூறினார்.

Tags

Next Story