பள்ளி ஆண்டு விழா: ஜார்கண்ட் கவர்னர் பங்கேற்பு

மதுராந்தகத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விழாவில், ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜார்கண்ட் மாநில கவர்னர் சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசு தற்போது முன்னேற்றத்திற்காக அதிக அக்கறை செலுத்தும் தருணமாக இந்த நேரத்தை நான் பார்க்கிறேன் பாரத பிரதமர் தமிழகத்திற்கு வந்து சென்று கொண்டிருப்பது இதை வெளிப்படுத்துகிறது. மாநில அரசு கவர்னர்களோடு ஒரு சமூக உறவை கண்டு இருப்பது இதன் மூலமாக உறவின் வெளிப்படுத்தி முன்னேற்றம் காணும் மாநிலமாக தமிழகம் மாற வேண்டும். தமிழகத்தில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது மழை என்பது வரலாறு காணாத மழை இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை அதே நேரத்தில் மழை என்பது ஏதோ புதிதாக வந்து விட்டது என்பது போலசொல்வது நாம் நிர்வாகத்தில் தவறு செய்து விட்டோம் என்பதை காட்டுகிறது.

தொலைநோக்கு பார்வையோடு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்று பகுத்து பார்த்து தொலைநோக்கு பார்வையோடு கூடிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் அப்படி செய்தால் எதிர்காலமழை பாதிப்பை எதிர்கொள்ள முடியும் மக்களை காப்பாற்ற முடியும். ஏரிகள் காணாமல் அழிப்பது மூலமாக வரண்ட கால மூலமாக ஏரிகளை அழிப்பதால் நீர் எங்கே தேக்கி வைப்பது எத்தனை ஏரிகள் காணமல் போய் உள்ளது தயவு கூர்ந்து தமிழக அரசு ஒரு வெள்ளை அறிவிக்க வேண்டும் அதன் பிறகு நீண்ட தொலைநோக்கு மூலம் எப்படி எதிர்காலத்தில் இதுபோன்ற கடினமான மழை வரும் பொழுது அதில் இருந்து தமிழகத்தை எப்படி காப்பற்ற வேண்டும் என்பதை சிந்தித்து பெரிய திட்டங்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். ஒரே நாளில் ஐயாயிரம் நிதி கேட்டு உள்ளீர்கள் ஒரே நாளில் மழை பெய்கிறது ஒரே நாளில் உங்களுக்கு எவ்வளவு நிதி கேட்கிறீர்கள் என்றால் அவ்வளவு வேகமாக உங்களுக்கு நிதி தேவைப்படுகிறது என ஆய்வு செய்யும் முடிகிறது என்றால் ஏன் இத்தகைய நிதி தேவைப்படுகிறது.

முன்பாகவே அமல்படுத்தி ஏன் தமிழகத்தை காப்பாற்ற இருக்க முடியாது எதை செய்தாலும் தமிழகத்தில் மத்திய அரசை தமிழக அரசு குறை சொல்லி அதன் மூலம் அரசியல் லாபம் நோக்கம் தேடுவதாகவும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாகவும் குறை கூறுகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு தலைவர் கட்சித் தலைவர்கள் சிறைக்கு போய் இருக்கிறவர்கள் தவறு செய்யாமல் சிறைக்கு போய் உள்ளார்களா அல்லது வெளியே உள்ளவர்கள் தவறு செய்யாமல் உள்ளார்களா என உங்களுக்கே தெரியும் என தெரிவித்தார்.

Tags

Next Story