வால்ஜாபாத்தில் சேதமடைந்த பள்ளி கட்டடம்: அச்சத்தில் மாணவர்கள்

வால்ஜாபாத்தில் சேதமடைந்த பள்ளி கட்டடம்:  அச்சத்தில் மாணவர்கள்

சேதமடைந்த பள்ளி கட்டிடம்

வால்ஜாபாத்தில் சேதமடைந்த பள்ளி கட்டடத்தால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 510 மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பள்ளியில், 6 - 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான வகுப்பறை, சமீபத்தில் புதியதாக கட்டிய கட்டடத்தில் இயங்குகிறது.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான வகுப்பறை, பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் செயல்படுகிறது. இந்த கட்டடங்கள் ஓடுகள் போட்ட கூரையாக உள்ளது. தற்போது, பள்ளி கட்டடம் மற்றும் கூரை ஓடுகள் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறன.

மழைக்காலங்களில் வகுப்பறையில் நீர் சொட்டுவதால் சமயங்களில் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டடத்தை அகற்றி, வகுப்பறைக்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என, மாணவர்கள் மற்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story