ரூ.1.14 கோடி மதிப்பில் பள்ளிக்கட்டிடம்
எம்.எல்.ஏ ஆய்வு
மேனலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டிட பணிகளை செய்யாறு எம்.எல்.ஏ ஜோதி ஆய்வு செய்தார்.
வெம்பாக்கம் ஒன்றியம் மேனலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை சார்பில் நபார்டு திட்டத்தின் மூலம் 1 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் புதிய 6 வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டும் பணியினை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.உடன் வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் ராஜூ, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சங்கர், வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தினகரன் ,அனக்காவூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திராவிட முருகன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தெய்வமணி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதம் சுப்பிரமணி, மாத்தூர் பாபு மற்றும்,அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story