பள்ளி வகுப்பறை கட்டுமான பணி - எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆய்வு

பள்ளி வகுப்பறை கட்டுமான பணி - எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆய்வு

 ஜவாஹிருல்லா நேரில் பார்வையிட்டு ஆய்வு

ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ 33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வகுப்பறை கட்டுமான பணிகளை பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் குழந்தை நேய பள்ளி கட்டிடம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 33 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை புதிய கட்டிடம் கட்டுமான பணிகளை பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது உடன் பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் நாசர் ,மனிதநேய மக்கள் கட்சி மாநில மீனவர் அணி செயலாளர் முகமது அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முகமது ரிபாயி, பாபநாசம் ஒன்றிய தலைவர் கலீல் ரகுமான், திமுக நிர்வாகிகள் ரமணி மணிகண்டன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story