இடை நின்ற மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அழைப்பு விடுத்த அதிகாரி

சிவகாசி அருகே, பள்ளியில் இடை நின்ற மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கல்வியை தொடருமாறு மாவட்ட வருவாய் அலுவலர் அழைப்பு விடுத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில்,சிவகாசி கிராம பகுதியில் பள்ளிக்கு சென்ற மாணவர்களில் சிலர் குடும்பச்சூழல் காரணமாக படிப்பை இடையில் நிறுத்தியுள்ளனர்.இவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்பதற்கான சூழலை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.இன்று,விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன்,சிவகாசி தாலுகாவில் உள்ள அனுப்பன்குளம்,மீனம்பட்டி மற்றும் பாறைப்பட்டி பகுதியில் பள்ளிக்கு இடை நின்ற மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று,அவர்களின் பெற்றோர்களை சந்தித்து மாணவர்கள் கல்வி கற்பதன் அவசியம் குறித்து விளக்கமளித்து பேசினார்

. இதனையடுத்து,அனுப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் தேவபிரசாத்,9ம் வகுப்பு மாணவி கஸ்தூரி,மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்த 6ம் வகுப்பு மாணவர் கார்த்திக்,8ம் வகுப்பு மாணவர் கார்த்திக்,8ம் வகுப்பு மாணவர் தங்கேஸ்வரன் மற்றும் பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் கணேஷ்குமார் ஆகிய 6 மாணவர்களும் தொடர்ந்து கல்வி கற்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.மாவட்ட வருவாய் அலுவலரின் இந்த நேரடி நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story